தரமற்ற நாற்றுகளால் விளைச்சல் பாதிப்பு

கோழிக்ெகாண்டை பூக்கள் ஒரு கிேலா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை இருக்கிறது. ஆனால்விளைச்சல் இல்லை என்றும், தரமற்ற நாற்றுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-08-08 15:52 GMT

கோழிக்ெகாண்டை பூக்கள் ஒரு கிேலா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை இருக்கிறது. ஆனால்விளைச்சல் இல்லை என்றும், தரமற்ற நாற்றுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோழிக்கொண்டை பூக்கள்

வாசமில்லா விட்டாலும் கண்ணைக் கவரும் வகையில் அழகாக இருப்பதால் பூக்களில் கோழிக்கொண்டை பூ முக்கிய பங்கு வகிக்கிறது. கோழிக்கொண்டை பூ சிவப்பு மற்றும் ரோஜா வண்ணங்களில் உள்ளன. இது 8 நாட்கள் வரை வாடாத தன்மை கொண்டது. அதிலும் சம்பங்கி மற்றும் மல்லிகை பூக்களை வைத்து மாலை கட்டும்போது கோழிக்கொண்டை பூ வைத்துக்கட்டுவதால் ரோஜாப்பூக்களின் தோற்றத்தை தருகிறது. கோழிக்கொண்டை பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு இருக்கிறது. ஒரு சில விவசாயிகள் மட்டுமே கோழிக்கொண்டை பூவை சாகுபடி செய்து வருகின்றனர். வடுகபாளையத்தில் உள்ள விவசாயி ராஜ்குமார் கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எங்களுக்கு சொந்த ஊர் நிலக்கோட்டை வடுகபாளையத்தில் நிலத்தை குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்து வருகிறோம். தற்போது கோழிக் கொண்டை பூக்களை நடவு செய்து உள்ளோம். திண்டுக்கல் மாவட்டம் நடுப்பட்டியிலிருந்து 2 ஆயிரம் நாற்றுகளை வாங்கி வந்து ½ ஏக்கரில் நடவு செய்தோம். ஒரு நாற்றின் விலை 1 ரூபாய். நடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகிறது. இதுவரைக்கும் மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் செலவு ஆகியுள்ளது.

தரமற்ற நாற்றுகள்

தற்போது பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதனால் பூக்களை பறிக்க தொடங்கி உள்ளோம். 5 முதல் 6 மாதங்கள் வரை பூக்களை பறிக்கலாம். ஒரு முறை பறித்தால் 60 கிலோ வரை கிடைக்கும். ஆனால் தற்போது 40 கிலோ வரை மட்டுமே கிடைக்கிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். பறித்த பூக்களை திருப்பூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ பூ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ஆனால் விலை இருந்தும் தரமற்ற நாற்றுகளால் உற்பத்தி குறைந்து இருக்கிறது. மேலும் எங்களுக்கு அரசு சலுகை விலையில் உரங்கள் மற்றும் மருந்து மற்றும் மானியமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்