மூலவைகை ஆற்றில் நீர்வரத்து:மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்

மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2023-10-15 18:45 GMT

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பொய்யாததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கடந்த வாரம் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது.

அந்த தண்ணீர் வருசநாடு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை கிராமங்களை கடந்து நேற்று முன்தினம் மாலை கடமலைக்குண்டுவிற்கு வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் கடமலைக்குண்டு கிராம மக்கள் ஆற்றில் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். மேலும் கடமலைக்குண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடும் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்