கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் பெய்த கனமழைக்கு கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-05-03 19:00 GMT

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் திடீெரன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தடுப்பணையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் யாரும் செல்ல வேண்டாம் என போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணை பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்