குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-04 12:02 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முழுவதும் பெய்த தொடர் சாரல் மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் குளிப்பது ஆபத்து என்பதால் நேற்று மதியத்திற்கு மேல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதைத் தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்