பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது

கன்னியாகுமரியில் கனமழை, பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2023-10-20 18:45 GMT

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் கன்னியாகுமரியில் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் தெருக்களில் வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் பாய்ந்து செல்ல முடியாமல் பகவதி அம்மன் கோவிலில் வெளி சுற்றுப்பிரகாரத்தில் புகுந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து கோவில் ஊழியர்கள் வடிகால் ஓடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் தேங்கிய மழை நீர் வடிந்தது. அதன்பிறகு மாலை 4.30 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்