உத்திர காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு
தொடர் மழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒடுகத்தூரை அடுத்த மேல்அரசம்பட்டு மலைபகுதியில் இருந்து உற்பத்தியாகும் உத்திரக்காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், வெட்டுவாணம் வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கிறது.
இந்த ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், சின்னசேரி, வெட்டுவாணம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகின்றது. இந்த ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும், இதனால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.