பெரம்பலூர் அருகே திடீர் தீ; புல், டயர்கள் எரிந்து நாசம்

பெரம்பலூர் அருகே திடீர் தீயில் புல், டயர்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-03-28 19:36 GMT

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் காய்ந்த புல்வெளி பகுதியில் நேற்று மாலை தீ பற்றி எரிவதாக பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகே சோளம் அறுக்கப்பட்டு சோளத்தட்டைகள் இருந்தமையால் காற்றின் மூலம் அங்கு பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் குடோன் உள்ளது. இதனால் தீயணைப்பு துறையினர் கவனமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 200 மீட்டர் வரை புல்வெளிகள் எரிந்து கருகின. அருகில் இருந்த சில குறு மரங்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூரை அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் அருகே ஒரு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்