அ.ம.மு.க. கொடியேற்று விழா- பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பு
அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.;
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இளையாத்தங்குடி கிராமத்தில் அ.ம.மு.க கட்சியின் கொடியேற்று விழா ஒன்றிய கழக செயலாளர் இளையாத்தங்குடி சிவா ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஜமீன்தார் ஆர்.சி.ராஜா, வையகளத்தூர் ஊராட்சி கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.