தி.மு.க. கொடியேற்று விழா
நத்தஅள்ளி உள்ளிட்ட 14 இடங்களில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பங்கேற்றார்.
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நத்தஅள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, திப்பட்டி, ஏறுப்பள்ளி, கோரப்பள்ளி உள்ளிட்ட 14 இடங்களில் தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாக்களுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு துணை தலைவர் பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தங்கமணி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ராஜகோபால், மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் வேலு, சித்தன், சின்னசாமி, கிருஷ்ணன், கன்னியப்பன், செல்லபெருமாள், தங்கராஜ், ரவி குமரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.