கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொடிநாள் வசூல் ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் அ.கீதா தொடங்கி வைத்தார். ஊர்வலம் காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை, சந்தைமேடு, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் துணை தாசில்தார்கள் சங்கரன், ஜெயகணேஷ், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு கொடிநாள் நிதிவசூல் செய்தனர்.