கொடி நாள் ஊர்வலம்

அரக்கோணத்தில் கொடி நாள் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-12-07 18:11 GMT

முப்படை வீரர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களின் நலன்களை காக்கும் வகையில் கொடி நாள் நிதி வசூலிக்கப்பட்டு படை வீரர்கள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரக்கோணத்தில் கொடி நாள் ஊர்வலம் நடைபெற்றது. அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பஜார் வரை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை தாசில்தார் சண்முக சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சமரபுரி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர்கள் யுவராணி, குழந்தை தெரேசா, ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், லட்சுமி நாராயணன், கலைவாணன், பவானி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்