தேசிய கொடியுடன் கடலில் 75 நிமிடம் மிதந்து சமூக ஆர்வலர் சாதனை

75-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் 75 நிமிடம் தேசிய கொடியுடன் மிதந்து சமூக ஆர்வலர் சாதனை படைத்தார்.

Update: 2022-08-13 16:02 GMT

ராமேசுவரம், 

75-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் 75 நிமிடம் தேசிய கொடியுடன் மிதந்து சமூக ஆர்வலர் சாதனை படைத்தார்.

யோகா

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 75-வது சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக ராமேசுவரத்தில் சமூக ஆர்வலர் சுடலை என்பவர் தேசிய கொடியுடன் கடலில் மிதந்து யோகா செய்து சாதனை படைக்க முடிவு செய்தார்.

இதற்காக நேற்று அக்னிதீர்த்த கடலில் 2 கைகளிலும் தேசிய கொடியுடன் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நிமிடம் மிதந்து படி யோகா செய்து சாதனை படைத்தார்.

தேசியகொடியுடன் சமூக ஆர்வலர் கடலில் மிதந்து கொண்டிருந்ததை அங்கு நீராட வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று பார்த்து அவருக்கு 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமேசுவரம் பகுதியில் நேற்று முதலே ஏராளமான வீடுகளில் தேசிய கொடி ஏற்றி பறக்க விடப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர். ரெயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தனுஷ்கோடி ஆகியோர் தலைமையில் ரெயில்வே போலீசார் பாம்பன் ரெயில் பாலத்தில் முழுமையாக சோதனை செய்தனர். ரெயில்வே பணியாளர்களை தவிர சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி நபர்கள் ரெயில் பாலத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்