மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மீன் வியாபாரி பலி

செம்பனார் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.

Update: 2023-09-14 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 53). மீன் வியாபாரியான இவர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு நெடுங்காட்டிலுள்ள தனக்கு சொந்தமான மீன் குட்டையை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பாலவேலி அய்யனார் கோவில் அருகே மெயின் ரோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மதியழகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் கார் டிரைவர் மண்ண பந்தல், அச்சுதராயபுரம் சேர்ந்த ஜெயசூர்யா (21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்