திருமயம் அருகே மீன்பிடி திருவிழா

திருமயம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நாட்டு வகை மீன்களை பொதுமக்கள் போட்டிபோட்டு பிடித்தனர்.

Update: 2023-07-29 19:03 GMT

திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டியில் மீன்பிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழா கண்மாய் நீர் வற்றியதை தொடர்ந்து நேற்று காலை நடைபெற்றது. இதில் ராங்கியம், பூலாங்குறிச்சி, மணப்பாறை, திண்டுக்கல், காரைக்குடி, நத்தம் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி கெண்டை, கட்லா, கெளுத்தி, விரால், ஜிலேபி ஆகிய நாட்டு வகை மீன்களை போட்டிபோட்டு பிடித்தனர். பின்னர் அந்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

Tags:    

மேலும் செய்திகள்