சாத்தான்குளம் அருகே மீன்பிடி திருவிழா
சாத்தான்குளம் அருகே மீன்பிடி திருவிழா நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மீன்பிடி திருவிழா நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி மீன்பிடித்தனர். விரால், கெண்டை, கெளுத்தி போன்ற பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.