மீன்பிடி திருவிழா
எஸ்.புதூர் அருகே தர்மபட்டி சாத்தன கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே தர்மபட்டி சாத்தன கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிகாலை முதலே சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்மாயை சுற்றிலும் காத்திருந்தனர். ஊர்முக்கியஸ்தர்கள் சாமி கும்பிட்டு வெள்ளை வீசியதை தொடர்ந்து கூடியிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கினர். ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை பயன்படுத்தி விரால், கெண்டை, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். மீன்கள் அதிகமாக கிடைத்தவர்கள் குறைவாக பிடித்தவர்களிடம் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இதனால் எஸ்.புதூர் சுற்றுவட்டார பகுதியில் அனைவரது வீட்டிலும் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.