மீன்பிடி திருவிழா

எஸ்.புதூர் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-15 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே திருவாழ்ந்தூர் கிராமத்தில் உள்ள சமுத்திர கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிகாலை முதலே சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கண்மாயை சுற்றிலும் காத்து நின்றனர். ஊர்முக்கியஸ்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தி கொடியசைத்ததை தொடர்ந்து கண்மாய்க்குள் இறங்கி ஊத்தா, வலை, கச்சா, தூரி உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

விரால், கெழுத்தி, கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் வலைகளில் சிக்கின. அதனை வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்