சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-02-25 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி பூதணி கண்மாய் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாய பணிகள் முடிவுற்று அறுவடைகள் நடைபெற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது. கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். நேற்று மு.சூரக்குடி கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சை கொடி காட்டினர். பின்னர் அங்கு திரண்டிருந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்மாய்க்குள் சென்று மீன்களை பிடிக்க தொடங்கினர். முறையூர், கல்லம்பட்டி, அரசினம்பட்டி, காளாப்பூர், முத்துச்சாமி பட்டி, ஈலுவாண்டி பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி கச்சா, தூரி, ஊத்தா போன்ற பலவகை வலைகளை கொண்டு மீன்பிடித்தனர். இதில் கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் வலையில் சிக்கின. அவற்றை வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்