மீனவ பெண் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை: வடமாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை - சீமான் வலியுறுத்தல்

மீனவ பெண் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-05-25 20:26 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப்பெண் சந்திராவை அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கயவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற செய்தி கடும் அதிர்ச்சியையும், பெரும் ஆத்திரத்தையும் அளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொடுங்குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு சீரழிவையும் தடுக்கத் தவறிய தி.மு.க. அரசின் செயலற்றதன்மை கண்டனத்துக்கு உரியது. போலீசாரை தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர், முற்றுமுழுதாகச் சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க இதன்பிறகாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். வடமாநில கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, விரைந்து மிகக்கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்