நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை
நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி தாலுகாவில் உள்ள பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி உள்பட 16 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த ஆண்டு (2022) வடகிழக்கு பருவமழை காலத்தில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.