மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நேற்று மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சில மீனவர்கள் கரையோர பகுதிகளில் சிறியரக பைபர் படகு மூலம் மீன்பிடித்தனர். பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.