மீனவ பெண்கள் போராட்டம்

போடி அருகே மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-07-07 18:45 GMT

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன் பிடிக்கும் மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்ட மீன்வளத்துறையில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், மீனவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நலத் திட்டங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும். தங்களை மீனவ கூட்டுறவு சங்கத்தில் இணைத்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தானாக அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்