மீனவ பெண்கள்,தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ பெண்கள்,தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-05-27 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் காவிரிபூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் கிராமமக்கள் கலெக்டர் மகாபாரதியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள், மீனவப் பெண்கள் வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மீனவப் பெண்களுக்கும், மீன்பிடி தொழிலாளர்களுக்கும் காவிரிபூம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பூம்புகார், புதுக்குப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்கள் அனைத்திலும் 100 நாள் வேலை எனப்படும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை ஒதுக்கீடு செய்து வேலை தர நடவடிக்கை எடுக்கவேண்டும். வருகிற 1-ம் தேதி கடலோர மீனவர் கிராமங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் முகூர்த்த தினமாக இருப்பதால் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் அதிக அளவில் உள்ளன. இதில் பங்கேற்க வேண்டி உள்ளதால், மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. அதனை கருத்தில் கொண்டு கூட்டத்தை வேறொரு தேதிக்கு மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்