காசிமேட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மீனவர்கள் - படகில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சியில் புயலில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை,
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை வரவேற்பதற்காக கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை காசிமேட்டில் உள்ள மீனவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக படகில் குழந்தை இயேசுவின் உருவச்சிலையை வைத்து, தங்கள் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் உற்சாகமாக நடனமாடினர்.
மீனவ சங்கங்கள் மற்றும் திருச்சபை பாதிரியார்கள் இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் புயலில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.