மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - தமிழக அரசு உத்தரவு

மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Update: 2022-12-08 14:20 GMT

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்