தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 245 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

Update: 2022-08-24 12:43 GMT

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 245 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பலத்த காற்று

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதே போன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கடலுக்கு செல்லவில்லை

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து இருந்தனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்