அதிக மீன்வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி
அதிக மீன்வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி
வேதாரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசனாகும். தற்போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நேற்று மீனவர்கள் வலையில் காலா, ஷீலா, வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு உள்ளிட்ட 5 டன் மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. காலா கிலோ ரூ. 350-க்கும், நண்டு கிலோ ரூ.300-க்கும், வாவல் ரூ.700-க்கும் ஏலம் போனது. வேதாரண்யத்தில் அதிக மீன்வரத்தாலும், அதற்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.