மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-05-18 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி பிற்பகல் 3.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்