மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை குறை தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் நேரில் வழங்கலாம். 29-ந்தேதியன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் அடுத்த மாதம் நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
---