மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந்தேதி நடக்கிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 3.30 மணியளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மீனவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.