மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.4-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-10-10 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை மீனவர் குறைதீர்க்கம் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர் தலைவர்கள், பெரியவர்கள், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேசலாம். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து கருத்துக்கள் பெற்று தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்