மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

பழையாறில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2022-12-19 18:45 GMT

கொள்ளிடம்:

பழையாறில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 350 விசை படகுகள், 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பழையாறில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.இதை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

இதை தொடர்ந்து பழையாறு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு மீன் பிடிக்கசெல்லவில்லை. இதனால் பழையாறு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலைக்கு செல்லவில்லை.இதேபோல் கொடியம்பாளையம், மடவாமேடு, கொட்டாய்மேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

கருவாடு பதப்படுத்தும் பணி

மேகமூட்டம் காரணமாக பழையாறு துறைமுகத்தில் உலர் தளத்தில் கருவாடுகளை பதப்படுத்தி பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்