மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வங்கக்கடலில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வானிலை மையத்தில் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில் மோசமான வானிலை காரணமாக கடலூர் பகுதியில் உள்ள வங்கக்கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட அனைத்து வகையான விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் நேற்று மதியத்திற்கு பிறகு மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.