தூத்துக்குடியில்மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வெள்ளிக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடியில்மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது

Update: 2023-08-01 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள், அவர்கள் பதிவு செய்த பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அதற்கான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகையால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

----

Tags:    

மேலும் செய்திகள்