விசைப்படகில் மீன்பிடிக்க ெசன்ற போது ஆழ்கடலில் மீனவர் திடீர் சாவு

விசைப்படகில் மீன்பிடிக்க ெசன்ற போது ஆழ்கடலில் மீனவர் திடீரென்று இறந்தார்.

Update: 2023-04-22 21:10 GMT

புதுக்கடை:

இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 43), மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் விசைப்படகில் கடந்த 11-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது டென்னிசுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. இதைகேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அத்துடன் சக மீனவர்கள் இறந்தவர் உடலுடன் கரை நோக்கி திரும்பினர். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் நேற்று தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இவரது மரணம் தொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்