படகில் மயங்கி விழுந்து மீனவர் சாவு

கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகில் மயங்கி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-05 15:23 GMT

குளச்சல்:

கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகில் மயங்கி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

குளச்சல் அருகே உள்ள மேலகுறும்பனையை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது67), மீனவர். இவரும் வேறு சில மீனவர்களும்  அதிகாலையில் ஒரு பைபர் படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பகல் 11.30 மணியளவில் குறும்பனை கடல் பகுதி மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ஜஸ்டின் திடீரென மயங்கி படகில் விழுந்தார். உடனே, சக மீனவர்கள் அவரை மீட்டு, படகில் அவசரமாக கரை திருப்பினர். தொடர்ந்து அவரை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜஸ்டின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்படை குழும போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த மீனவர் ஜஸ்டினுக்கு ஜோதி (55) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்