கடல் அட்டைகளுடன் மீனவர் கைது
ராமநாதபுரம் அருகே கடல் அட்டைகளுடன் மீனவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்.
ராமநாதபுரம் அருகே துறைமுக போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொண்டி சோழியக்குடி சாலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 50 கடல் அட்டைகள் இருந்ததை கண்டு அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மேற்கண்ட நபர் சோழியக்குடி பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் (வயது 46) என்பது தெரிந்தது. கடலில் மீன்பிடிக்க சென்றபோது கடல்அட்டைகளை பிடித்து கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்த கடல்அட்டையை பறிமுதல் செய்தனர்.