ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-29 16:49 GMT

ராமேசுவரம், 

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

6 மீனவர்கள் சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை, எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களது படகையும் பறிமுதல் செய்தது. 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ேகாரியும் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டனர்.

800 படகுகள்

இதனால் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நேற்று துறைமுக கடல் பகுதியில் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்