மணமேல்குடி மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

வரத்து குறைவால் மணமேல்குடி மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்தது.

Update: 2023-02-25 18:53 GMT

மணமேல்குடி, கட்டுமாவடி ஆகிய மீன் மார்க்கெட்டுகளில் கடந்த 2 நாட்களாக மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. இது குறித்து மீனவர்கள் கூறுகையில் கடந்த 2 நாட்களாக கடலில் திசை மாறி காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் மீன்கள் அதிகமாக சிக்குவது கிடையாது. குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைவாக உள்ளது என்றனர். மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே மீன்கள் வந்ததால் மீன்களின் விலை சற்று அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்