தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது

வரத்து அதிகரிப்பு, ஓணம் பண்டிகை எதிரொலியாக தூத்துக்குடியில் நேற்று மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

Update: 2023-08-26 19:00 GMT

வரத்து அதிகரிப்பு, ஓணம் பண்டிகை எதிரொலியாக தூத்துக்குடியில் நேற்று மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

மீன்கள் வரத்து அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் சனிக்கிழமைகளில் கரை திரும்புவார்கள். அதன்படி நேற்று அதிக அளவு நாட்டுப்படகுகள் கரை திரும்பியது. இதனால் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை மீன் ஏல கூட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

விலை குறைந்தது

நேற்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதன் காரணமாகவும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு குறைந்த அளவே கேரளாவுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் மீன்களின் விலை நேற்று வழக்கத்தைவிட கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை குறைந்து காணப்பட்டது.

நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,000 வரையும், விளை மீன் கிலோ ரூ.400 வரையும், ஊளி ரூ.350 வரையும், பாறை ரூ.300 வரையும், நெத்திலி ரூ.100 ரூபாய் வரையும், கிழவாலை ரூ.170 வரையும், மயில் மீன் ரூ.220 வரையும், குறுவளை ரூ.300 வரையும் விற்பனையானது.

எனினும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விலையும் குறைவாக காணப்பட்டதால் மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்