திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்தது.

Update: 2022-11-17 19:30 GMT

திசையன்விளை:

கார்த்திகை மாதம் பிறந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து நேற்று விரதத்தை தொடங்கியுள்ளனா். இதனால் பெரும்பாலான இந்துக்கள் தங்களின் வீடுகளில் விளக்கேற்றி விரதம் கடைபிடிப்பதால், அவர்கள் சைவ உணவிற்கு மாறிவிட்டனர். இதனால் எப்போதும் கூட்டம் அலைமோதும் திசையன்விளை மீன் மார்க்கெட் நேற்று கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மீன் விலையும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.

வழக்கமாக சாளை ரக மீன் ரூ.10-க்கு 7 முதல் 8 வரை விற்பனை செய்யப்படும். நேற்று ரூ.10-க்கு 25 சாளை மீன்கள் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற ரக மீன்களும் வழக்கத்தைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மீன் வியாபாரிகளிடம் கேட்ட போது, வெயில் காலங்களில் விற்பனையாகாத மீன்களை கருவாடாக மாற்றி விற்பனை செய்து வந்தோம். தற்போது மழை காலம் என்பதால் வெயில் இல்லை. இதனால் சாளை ரக மீன்களை கருவாடாக மாற்ற முடியாது. அதனால் கிடைத்தது வரை லாபம் என விற்பனை செய்கிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்