மீன்கள் விலை குறைவு; 1 கிலோ வஞ்சிரம் ரூ.600-க்கு விற்பனை

திருவாரூரில், மீன்கள் விலை குறைந்து 1 கிலோ வஞ்சிரம் ரூ.600-க்கு விற்பனையானது. அதேபோல் இறால், பாறை மீன்கள் ரூ.300-க்கு விற்பனையானது.

Update: 2023-04-13 18:45 GMT


திருவாரூரில், மீன்கள் விலை குறைந்து 1 கிலோ வஞ்சிரம் ரூ.600-க்கு விற்பனையானது. அதேபோல் இறால், பாறை மீன்கள் ரூ.300-க்கு விற்பனையானது.

விலைகுறைவு

பெரும்பாலான வீடுகளில் மீன், ஆடு, கோழி இறைச்சி இல்லாத அசைவ உணவுகளே இருப்பதில்லை. பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் எப்போதும் இறைச்சி விற்பனை அதிகளவில் இருக்கும். திருவாரூர் நகரில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் கடைகளுக்கு நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று திருவாரூரில் மீன் விற்பனை மும்முரமாக நடந்தது.

மீன்கள் வரத்து எப்போதும் போல் இருந்ததால் அதன் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. ரூ.400-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் ரூ.300-க்கும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.600-க்கும், இறால் ரூ.300-க்கும், மத்தி மீன் ரூ.100-க்கும், கானா கெண்டை மீன் ரூ.200-க்கும், நாட்டு மீன் ரூ.150-க்கும் விற்பனையானது. பாறை, நண்டு விலைகள் மாற்றம் இல்லாமல் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

மீன்பிடி தடைக்காலம்

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், திருவாரூருக்கு 4 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி பகுதிகளில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. திருவாரூரில் நேற்று முன்தினம் வரை மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், நேற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது.

இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் நேற்று முன்தினம் முதல் கரைதிரும்பி விட்டனர். பெரும்பாலானோர் மீன்பிடிக்க செல்லவில்லை. கேரளாவில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடைக்காலம் அமல் படுத்தினால் மீன்கள் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்