வரத்து குறைவால் மீன்களின் விலை உயர்வு

Update: 2023-04-30 15:52 GMT


மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. மேலும் விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட மீன்களின் விலை விவரம் வருமாறு:- வஞ்சிரம் ரூ.900, வெல மீன் ரூ.500, ஊழி ரூ.380, பாறை ரூ.550, அயிலை ரூ.240, சங்கரா ரூ.380, இறால் ரூ.600, மத்தி ரூ.140 ஆகிய விலைகளில் விற்கப்பட்டது. விலை உயர்வு குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீன் வரத்து தமிழகம் முழுவதும் குறைந்துள்ளது.இதனால் விலை அதிகரித்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் படிப்படியாக மீன்களின் விலை குறையும், என்றார்.

மேலும் செய்திகள்