காவேரிப்பட்டணம் அருகே வன்னாங்குட்டை ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
காவேரிப்பட்டணம் அருகே வன்னாங்குட்டை ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் ஊராட்சியில் வன்னாங்குட்டை ஏரி உள்ளது. இதில் இருந்து ஆழ்துளை கிணறு வழியாக நடுப்பையூர், மலைப்பையூர், ஆயப்பன் கொட்டாய், ஆத்தோரத்தான் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினிேயாகம் செய்யப்படுகிறது. நேற்று இந்த ஏரியில் மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த ஏரியில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. எனவே இந்த ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் மர்ம நபர்கள் யாராவது தண்ணீரில் விஷம் கலந்து இருக்கலாம். அல்லது கழிவுநீர் ஏரியில் கலப்பதால் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே பொதுப்பணி துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.