முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க www.tngasa.in அல்லது www/ tngasa.org என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இந்த கல்லூரியில் ஆங்கில வழியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடங்களும், பி.காம். (வணிகவியல்) பாடமும், பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அரசின் நலத்துறை கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது.
அரசு இலவச விடுதி வசதிகளும் உள்ளது. அரசு கல்லூரியில் உயர் கல்வியினை மாணவர்கள் பயில இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தெரிவித்துள்ளார்.