முதலாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி
காணை வி.இ.டி. கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர்:
கானையில் செயல்பட்டு வரும் வி.இ.டி. கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் பொருளாளர் சந்தானலட்சுமி செல்வராஜ், துணை தலைவர் துர்காதேவி விஜய்ஆனந்த், துணை செயலாளர் ராஜலட்சுமி திலிப்குமார், இயக்குனர் எஸ்.கார்த்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் முருகன் வரவேற்றார். முதல்வர் பி.பழனி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி பேராசிரியர்களை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் ஈஸ்வரி, ஏசுராஜன், நிர்வாக அலுவலர் பாக்யராஜ், கல்லூரி அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.