முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடு
திருவண்ணாமலை திருவண்ணாமலையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது என முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். திருவண்ணாமலையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது என முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது என முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலைக்கு வருகிற 8 மற்றும் 9-ந் தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதை முன்னிட்டு முதல்- அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் திருவண்ணாமலைக்கு வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் வட பகுதியில் பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தான். இங்கு 8 சட்டமன்ற தொகுதி, 18 ஒன்றியம், 10 பேரூராட்சி, 4 நகராட்சிகள் உள்ளன. பெரிய மாவட்டத்திற்கு முதல்- அமைச்சர் வருவதால் அவரிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இதனால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய வேண்டும்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தினால் தேர்வு செய்யப்பட்டு 15 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. முதல்- அமைச்சர் வருவதை முன்னிட்டு 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் தயாராகி வருகிறது.
முதல்- அமைச்சர் நிகழ்ச்சி 15 ஆயிரம் பயனாளிகளை வைத்து நடத்தி விட்டு மீதமுள்ள பயனாளிகளுக்கு ஒருவாரத்திற்குள் அவர்களுக்கு வீடு தேடி ஆணை வழங்க மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இல்லம் தேடி கல்வி
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் புறப்பட்டு கீழ்பென்னாத்தூருக்கு 11 மணியளவில் வருகை தருகிறார். அங்கு உள்ள ஆராஞ்சி என்ற பகுதியில் மாநில நிகழ்ச்சியாக இல்லம் தேடி கல்வி என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாநில அளவிலான அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கு பின்னர் அன்று மாலையில் தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மறுநாள் (9-ந் தேதி) காலையில் 9 மணியளவில் அரங்கத்திற்கு அவர் வருகை தருகின்றார். 9 மணிக்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை செல்கின்றார். குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் அவர் வந்து விடுவார். அதனால் அன்று காலையில் 8.30 மணிக்குள் பயனாளிகளை விழா பந்தலில் அமர வைக்க வேண்டும். பயனாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மேற்கொள்ள வேண்டும். பயனாளிகளை நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அழைத்து வந்து அமர வைப்பதற்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
மருத்துவ குழு
நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பிலும், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பிலும் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விழாவில் முதல்- அமைச்சரால் குறிப்பிட்ட துறையின் சார்பில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்க முடியும். அதனால் முதல்- அமைச்சர் சென்ற பிறகு அழைத்து வரப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் தான் அழைத்து செல்ல வேண்டும். பட்டியலில் உள்ள மீதமுள்ள பயனாளிகளுக்கு வீடு தேடி ஆணைகளை வழங்க வேண்டும். முதல்- அமைச்சரின் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலகிருஷ்ணன், விஷ்ணுபிரசாத் எம்.பி., பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சையத் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.