முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் சென்னையில் இருந்து இன்று புறப்படுகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2022-06-27 23:38 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து கார் மூலம் புறப்படுகிறார்.

இன்று இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் அவர் ஆம்பூரில் தங்குகிறார்.

நாளை திருப்பத்தூர்

நாளை (29-ந்தேதி) காலை திருப்பத்தூருக்கு செல்கிறார். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அங்கிருந்து பிற்பகலில் புறப்பட்டு வேலூர் செல்கிறார். வேலூரில் புதிய பஸ் நிலையத்தை அவர் தொடக்கி வைக்கிறார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடக்கும் விழாவில், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

30-ந்தேதி ராணிப்பேட்டை

நாளை மறுநாள் (30-ந்தேதி வியாழக்கிழமை) காலை ராணிப்பேட்டையில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்துவைக்கிறார். மக்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்