முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கு பிரமாண்ட பந்தல்
சிவகங்கை மாவட்டத்துக்கு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் திருப்பத்தூர் அருகே பங்கேற்கும் அரசு விழாவுக்காக அமைக்கப்படும் பிரமாண்ட பந்தலில் 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியும்..
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டத்துக்கு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் திருப்பத்தூர் அருகே பங்கேற்கும் அரசு விழாவுக்காக அமைக்கப்படும் பிரமாண்ட பந்தலில் 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியும்..
சுற்றுப்பயணம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் நாளை(புதன்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார்.
முன்னதாக இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். இரவில் அவர் மதுரையில் தங்குகிறார்.
அதன் பின்னர் நாளை காலை மதுரையில் இருந்து அவர் காரில் புறப்பட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை காலை 9 மணிக்கு அவர் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, திருப்பத்தூர் அருகே காரையூரில் காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவுற்ற திட்டங்களை ெதாடங்கிவைத்து பேசுகிறார்.
பிரமாண்ட பந்தல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்காக காரையூரில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் பந்தலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன..
சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் புதுக்கோட்டை புறப்பட்டு செல்கிறார்.