மும்பையில் இந்தியா கூட்டணியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பினார்.

Update: 2023-09-01 15:28 GMT

சென்னை,

இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்றது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றிருந்தார்.

இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டத்தில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றும், பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை நிறைவுசெய்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்